முக்கிய துருப்பு சீட்டை கையில் எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்! அதிர்ச்சியில் முக ஸ்டாலின்! திமுக கூட்டணிக்கு பலத்த பின்னடைவு!  - Seithipunal
Seithipunal


காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தாரமங்கலத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாடு பாதுகாப்பாக இருக்க நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தான் அமைய வேண்டும் என்று அவர் பேசினார் . மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டி பேசினார். 

அதேபோல இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட துனை முதல்வர் ஓபிஎஸ் இதே செய்தியினை பேசி வாக்கு சேகரித்தார். மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே முக ஸ்டாலின் இது குறித்து பேசுவாரா என்று சவால் விட்டுள்ளனர். ஏனெனில் தேர்தல் ஆரம்பித்தது முதலே முக ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையான நீர் ஆதார திட்டங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பேசினால் வரக்கூடிய வாக்குகளும் வராமல் போய்விடும் என்பது தான் உண்மையான கள நிலவரம். ஏனெனில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எல்லாமே திமுக ஆதரவு கட்சிகள் தான். அவர்களிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு தேவையானதை கேட்கலாமே என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதாலே முக ஸ்டாலின் கப்சிப் என தலைவர்களை திட்டிக்கொண்டு மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

இந்த நேரம் பார்த்து தான் ஓபிஎஸ், இபிஎஸ் இதனை கையில் எடுத்துள்ளார்கள். இது நிச்சயம் திமுகவிற்கு பின்னடைவாக தான் இருக்கும். திட்டினால் ஒட்டு கிடைக்காது, திட்டங்களை கூறினால் தான் ஒட்டு கிடைக்கும் என்பதனை ஸ்டாலினுக்கு சொல்லபோவது யாரோ? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin silence about water source plan for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->