நாகை: கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்.! ஒன்று கூடிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கஜா புயல் காரணமாக  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்துளளது. கஜா புயலுக்கு இதுவரை 65 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. பலரும் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம், மின்சாரம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்கள் புகார் எழுப்புகின்றனர்.  இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்து முடித்து டெல்லி சென்றது. மத்திய குழுவின் அறிக்கை இஇன்று ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், புயலால் பாதித்த பகுதிகளை பாதுகாப்புத்துறை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் ஒன்று கூடி இந்த பொதுமக்களிடம் ஆறுதல் கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CENTRAL MINISTER NIRMALA SEETHARAMAN VISIT TO NAGAPATTINAM FOR GAJA IMPACT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->