ஏமாற்று வேலை உஷார்..!! உங்கள் வங்கி கணக்கும் விற்பனைக்கு..? வெளியான திடுக்கிடும் தகவல்..!! - Seithipunal
Seithipunal


உங்கள் வங்கி விவரங்களை ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும் விற்கும் சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.

எந்த இணையதளத்திற்கு சென்றாலும் சரி, உங்கள் கார்டு விவரங்களை பதிவு செய்யுங்கள் என்று தான் கேட்கிறது.

இத்தனைக்கும் அதிநவீன பாதுகாப்பு வசதி  கொண்ட வங்கி இணையதளங்களை நெருங்கும் போதே 'பாப் அப்' விண்டோ திறந்தால் அதில் எதையும் உள்ளிட வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.

அதனை கவனிக்காமல் பலரும் வங்கி இணையதளம் என்று நினைத்து தங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து விடுகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் பலரது வங்கி கணக்கு விவரங்களும் திருடப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

திருடிய விவரங்கள் தற்போது விற்பனைக்கும் வந்து விட்டது.பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச கும்பல் இந்தியாவில் இருக்கும் வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டுகள் விவரங்கள், செல்போன் எண்கள், இ–மெயில் உள்ளிட்டவற்றை இணையதளம் மூலம் பெற்று பணத்தை மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி அதிகாரி ஜெய்கிஷான் குப்தா, தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.72 ஆயிரம் திருடு போனதாக ஆகஸ்டு 28–ந் தேதி புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட  விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குப்தாவின் வங்கி விவரங்களை யாரோ ஒருவர் குற்றவாளிக்கு ரூ.500–க்கு விற்றுள்ளனர். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank account details on sale for Rs 500; MP police unearth Pak links to hack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->