கடிகாரத்தின் நேரத்தை தலைகீழாய் மாற்றிய இந்தியர்கள்.! ட்ரண்ட் செட் ஆகும் புதியமுறை கடிகாரங்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது பின்பற்றப்படும் கடிகார முறையை மாற்றி இந்தியாவின் குஜராத் மாநிலத்து மக்கள் புதிய முறையை பயன்படுத்தி, அதை ட்ரண்ட் செட்டாகவும் மாற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் மத்திய பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வழக்கத்திற்கு மாறாக வலதிலிருந்து இடப்புறமாக சுற்றும் கடிகாரத்தை பயன்படுத்திவருகின்றனர். 

இதற்கு அவர்கள் கூறும் காரணம், ''தங்களின் நம்பிக்கைப்படி இந்த நிலப்பகுதி இதுபோன்ற சுழற்சி முறையிலேயே சுற்றுவதாகவும், அதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட ''ஆண்டி கிளாக் வைஸ்'' எனப்படும் எதிர்திசையில் வட்டமிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாக'' தெரிவிக்கின்றனர்.

இதில் ஒரு விந்தையான விடயம் என்ன வென்றால், இதுபோன்ற கைக்கடிகாரங்களில் மத்தியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியம். குஜராத்தின் உள்ள மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் பழங்குடியினர் இடையே நீண்ட காலமாக இந்த நம்பிக்கை இருந்து வருகிறது.

குஜராத் மாநிலம், தபி மாவட்டம் வலோத் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின போராளியாக இருக்கும் ''லால்சிங் காமித்'' என்பவர் இந்த ஆண்ட்டி க்ளாக் வைஸ், கிளாக்குகளை, ''ஆதிவாசி காதிஸ்'' (ஆதிவாசி கடிகாரங்கள்) என்ற பெயரில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

இந்தவகை கைக்கடிகாரங்கள் அங்கு வாழும் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கடிகாரங்கள் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடயம் தற்போது அம்மாநிலத்தில் வைரலாக பரவி, கடிகார உலகத்தில் புதிய ட்ரண்ட் சேட்டை உருவாக்கும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ANTI CLOCK WISE CLOCK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->