மீண்டும் சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம்! - Seithipunal
Seithipunal


நடிகை பாவனி மீண்டும் ஒரு புதிய சீரியல் தொடரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடர் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் நடிகை பாவனி. 

இவர் மீண்டும் புதிய தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

மேலும் இவர் ரெட்டை வால் குருவி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளரான அமீர் என்பவர் உடன் காதல் ஏற்பட்டதால் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக பாவனி தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த தொடரிலும் நடிக்காத இவர் தற்போது புதிய தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

இந்நிலையில் பாவனி நடிக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhavani Re entering Serial


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->