சர்வதேச அளவில் கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - அதிபர் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஐரோப்பியா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுதங்களையும் அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச அளவில் கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் நிதியமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஜெலன்ஸ்கி பேசியதாவது,

ரஷ்யா குண்டுவெடிப்பால் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும், உக்ரைனை மீண்டும் கட்டமைக்க பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு இப்போது எவ்வளவு உதவி கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரமாக ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றும், இதுபோன்ற கொடூரமான போர் மற்ற நாடுகளுக்கு பரவாது என்பதற்கு விரைவில் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் அளிப்போம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says war will soon end if more international funding is available


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->