உக்ரைனின் பக்முத் நகரை ரஷ்யா முழுமையாக அழித்துவிட்டது - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 10 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களையும் வழங்கி உதவி வருகின்றது.

மேலும் போரில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைபற்றியுள்ளதால் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும்படியாக தொழிற்சாலைகள் மற்றும் ஆற்றல் மூலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஒடடேசா நகரங்களில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அப்போது, கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்றும், டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டதால் அந்த நகரில் வாழ்வதற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky alleges that Russia has completely destroyed the Ukrainian city of Pakhmut


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->