எட்ட முடியாத உயரத்தில் வேளாண் மஸ்கின் சொத்து! உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம்! - Seithipunal
Seithipunal


டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அவரது நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் தொடர்ந்து உயரும் நிலையில், சமீபத்தில் அவரது மொத்த சொத்து மதிப்பு 500 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது. பின்னர் சிறிது குறைந்து 499 பில்லியனாக அமைந்தாலும், உலக பணக்காரர்களின் பட்டியலில் அவர் தனித்த முன்னிலையில் இருப்பதை இது காட்டுகிறது.

இந்த மதிப்பு இந்திய ரூபாயில் கணக்கிடும் போது சுமார் 44.33 லட்சம் கோடியாகும். நிபுணர்களின் கணிப்பின்படி, இதே போக்கில் வளர்ச்சி நீடித்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் உருவெடுப்பார் என கூறப்படுகிறது.

அவருக்குப் பிறகு, ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன் 31 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதனால் உலகளாவிய தொழில் மற்றும் செல்வ தரவரிசையில் மஸ்க், மற்ற போட்டியாளர்களால் எட்ட முடியாத உயரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

worlds richest person Elon Musk


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->