குழந்தைக்கு பெயர் வைக்க 7 லட்சம் வாங்கும் பெண்..எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


குழந்தைக்கு பெயர் வைப்பதையே முழுநேர தொழிலாக செய்து வரும் இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இளம்பெண் டெய்லர் ஹம்ப்ரே என்பவர் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தனது  முழுநேர தொழிலாக செய்துவருகிறார். நியூயார்க் நகரை சேர்ந்த பல பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க இவரை தான் அணுகுகிறார்கள் என்றும் அந்த குழந்தையின் பிறந்த நேரம், தேதி மற்றும் பெற்றோர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து சரியான பெயரை அந்த குழந்தைக்கு அவர் தேர்வு செய்து கொடுத்து வருகிறார்.

மேலும், ஒரு குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு 7 லட்சம் ரூபாய் வரை அவர் சேவை கட்டணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைக்கு பெயர் வைப்பதையே முழு நேர வேலையாக செய்து இளம்பெண் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman buys Rs 7 lakh to name baby


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->