ஒரே வாரத்தில் பயங்கரம்.. மளமளவென அதிகரித்த கொரோனா பாதிப்பு.! எச்சரிக்கும் WHO தலைவர்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019 இல் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையே ஆட்டிப்படைத்தது. இதனால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இத்தகைய நிலையில் தற்போது மீண்டும் தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

அங்கே அன்றாட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த நான்கு வாரங்களில் கொரோனா இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்  அந்த வீடியோவில், "ஒரே வாரத்தில் 15 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரை விட்டுள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் குழந்தை இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இன்னமும் கொரோனாவுடன் போராட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அனைவரும் முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் 59 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

இதில் 64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் கொரோனா தொற்று அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறக்கூடாது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who warning To India about covid


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?



Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?




Seithipunal