புதிய வசதியை வெளியிட்ட  வாட்ஸ்அப் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிடுவது வழக்கமாகும். அதன் படி, வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிடுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில் இனி வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்'  முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத வகையில், புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. 

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில வலைதளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வியூ ஒன்ஸ்' வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

'வியூ ஒன்ஸ்' மூலம் வரும் புகைப்படங்களை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இந்த வசதி அறிமுகமானதில் இருந்து 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க பயனர்களுக்கு அனுமதி இருந்தது. 

இப்போது, 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. மேலும், வாட்ஸ்அப் பீட்டா சேனலின் சில ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இந்த அம்சத்தை எப்போது பயன்படுத்த முடியும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp company new update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->