அமெரிக்கா வசம் காசா சென்றால் எப்படி இருக்கும்..? டிரம்ப் வெளியிட்ட வீடியோ..!
What would it be like if the US took over Gaza AI Video released by Trump
காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பரஸ்பரம் அடிப்படையில், கைதிகளின் விடுவிப்பு நடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சில வாரங்களுக்கு முன் காசாவை எடுத்து கொள்ள விரும்புகிறேன் என அறிவித்து, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார்.
இந்நிலையில், காசாவை அமெரிக்கா தன்வசப்படுத்தி, எடுத்து கொண்டால் அதன் பின்னர் எப்படி இருக்கும் என்பது குறித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.

குறித்த வீடியோவில், போரால் சீரழிந்த காசா தற்போது எப்படி உள்ளதோ, அதுபோன்ற காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. ஆனால், கடற்கரையருகே நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள், தெருக்களில் சொகுசு கார்கள், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற தனித்துவம் வாய்ந்த உருவம் கொண்ட உயர்ந்த கட்டிடம் என நகரம் உருமாற்றம் அடைவது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் காசாவின் ஆடம்பர தோற்றங்கள் காட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக, பனைமரங்களால் சூழப்பட்ட டிரம்ப்பின் பெரிய உருவ சிலை ஒன்றும் காணப்படுவதோடு, அதன் பின்னணியில் சூரியன் மறையும் காட்சிகளும் அடங்கியுள்ளன. இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள புதிய காசாவில் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

எலோன் மஸ்க் கடற்கரையில், சிரித்தபடி தன்னுடைய உணவை சாப்பிடுவது போலவும், அவர் சுற்றி தாடி வைத்த நடன கலைஞர்கள் விருந்தினர்களை மகிழ்விப்பது போல காட்சி அமைந்துள்ளது.
அத்துடன், கடற்கரையில் இருந்து சற்று தொலைவில், குழந்தை ஒன்று சந்தை பகுதியில், டிரம்ப் பலூன் ஒன்றை பிடித்தபடி காணப்படுகிறது. இரவு விடுதி ஒன்றில், நடன பெண்மணியுடன் டிரம்ப் இருப்பது போன்றும், மஸ்க் கடற்கரையில் பணமழை பொழியும் காட்சிகளும் உள்ளன.அடங்கியுள்ளன.
அத்துடன் புதிய காஸாவின் நகரின் நடுவே, யார் தலைவன் என காட்டும் வகையில், டிரம்ப் காசா என்ற பெயருடன் உயர்ந்து நிற்கும் கட்டிடம் ஒன்றும் உள்ளது. இறுதியாக, டிரம்ப் மற்றும் நெதன்யாகு இருவரும் நீர்நிலை ஒன்றின் அருகே கோடை வெயிலை தணிக்கும் வகையில் டிரவுசர் அணிந்தபடி தளர்வாக படுத்திருக்கின்ற மாதிரியான காட்டிச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
English Summary
What would it be like if the US took over Gaza AI Video released by Trump