கொல்லப்பட்ட உச்சத்தலைவர் அலி கமேனி உடல் இன்னும் அடக்கம் செய்யாமல் இருப்பதற்கு காராம் என்ன..? பயத்தில் உள்ளதா ஈரான்..? - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. அதன் பின்னர் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவியது. ஒரு மாதமாக நடந்த தாக்குதல் தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தில் உள்ளது.

இந்த தாக்குதலில், முதல் நாள், அதாவது பிப்ரவரி 28 அன்று, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அப்போதிலிருந்தே உடல் அடக்கம் செய்யப்படாமல் தற்போது வரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, அவரது இறுதிச் சடங்கை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்துவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் பல லட்சம் மக்களை ஒன்றுகூட வைத்து இறுதிச் சடங்கு நடத்துவதும் இந்த நேரத்தில் ஆபத்தானது. இந்த இறுதி சடங்கு நேரத்தில் இதர முக்கிய தலைவர்கள், மக்கள் கூடும் இறுதி ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தினால், அது ஈரான் ஆட்சியையே வேரோடு சாய்த்துவிடும் எனக் ஈரான் நினைக்கிறது.

இதன் காரணமாக தற்போது எந்தவொரு ரிஸ்க்கையும் எடுக்கும் நிலையில் ஈரான் அரசு இல்லை எனவும் ஈரான் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் கவனமாகவே ஒவ்வொரு நடவடிக்கையையும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அலி கமேனி உடலை நீண்ட நாட்களே இப்படியே வைத்திருக்கவும் முடியாத காரணத்தால் கமேனியின் சொந்த ஊரான 'மஷாத்' நகரில் ரகசியமாகவோ அல்லது பலத்த பாதுகாப்புடனோ அடக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், ஒரு நாட்டின் உச்ச தலைவர் இறந்து ஒரு மாதம் ஆகியும், அவரை முறையாக அடக்கம் செய்ய முடியாத நிலை, அந்த நாட்டின் அதிகார மட்டம் எவ்வளவு குழப்பத்தில் உள்ளது என்பதைக் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏப்ரல் 08-இல் போடப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அதற்குள் காமேனியின் இறுதிச் சடங்கை நடத்தத் தவறினால், மீண்டும் போர் வெடிக்கும் நிலையே உள்ளதாகவும், இது நிலைமையை மேலும் மோசமானதாகவே மாற்றும் எனவும் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the reason behind the delay in burying the body of Supreme Leader Ali Khamenei


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->