13 வடங்களாக வில்லன் நடிகருடன் லிவிங் டுகெதரில் வசிக்கும் நடிகை; இருவருக்கும் இடையில் 18 வயது வித்தியாசம்...? - Seithipunal
Seithipunal


பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோருடன் 2008 ஆம் ஆண்டு 'ஃபேஷன்' திரைப்படத்தில் அறிமுகமானவர் முக்தா கோட்சே. ஃபேஷன் (2008) மற்றும் ஹீரோயின் (2012) போன்ற ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர்.; மிஸ் இந்தியா ஃபேஷன்; போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக அரையிறுதி வரை சென்றவர்.

இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சாமி காதலியாக  ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடத்து இருந்தார். மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்த முக்தா கோட்சே, ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி 2002-இல் 'மிஸ் கிளாட்ராக்ஸ் மெகா மாடல்' என்ற பட்டத்தை வென்றார். 

அதன்படி பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தவ முஃதா,  ஆல் தி பெஸ்ட் (2009), ஜெயில் (2009), மற்றும் பெசுபன் இஷ்க் (2015) போன்ற பல படங்களில் நடித்துள்ள நிலையில், அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

கடந்த 03 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில்,  பிரபல நடிகர் ராகுல் தேவ்வுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். ராகுல் தேவ், அஜித்தின் வேதாளம் போன்ற படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவரின் மனைவி ரீனா 2009-இல் காலமான நிலையில், இதற்கு பிறகு தனது மகனை தனியாக ராகுல் வளர்த்து வந்த நிலையில் தான், முக்தா கோட்சேவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வசிக்கத் தொடங்கினர். ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே இருவரும் ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்தாவைவிட ராகுல் தேவ் 18 வயது மூத்தவர். இருவருமே தங்களின் உறவு தொடர்பாக பல முறை பொதுவெளியில் பேசியுள்ளனர். தங்களின் காதல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளனர்.  இந்த நடிகை தன்னை விட 18 வயது மூத்த ஒரு ஹீரோவுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இருவரும் 13 வருடங்களாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress living in a live in relationship with a villain actor for 13 years


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->