வரும் 24-ஆம் தேதி ரீ ரிலீஸாகும் விஜய்யின் வெற்றிப்படம்; குஷியில் ரசிகர்கள்..!
Vijays film Sivakasi is set to re release on the upcoming 24th
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் வெற்றி படமான சிவகாசி, ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு (24-ஆம் தேதி) மறுநாள் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ஆம் வெளியாகி வசூல் சாதனை படைத்த இத்திரைப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
வரும் 24-ஆம் தேதி முதல் நவீன தொழில்நுட்பத்துடன் 4K Remastered பதிப்பில் முதல் திரையரங்குகளில் சிவகாசி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதாவது, படத்தின் பழைய காட்சிகள் அனைத்தும் அதிநவீன 4K தரத்திற்கு மாற்றப்பட்டு, துல்லியமான ஒலி அமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக சூப்பர் ஹிட்டான படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வரிசையில் கில்லி, படையப்பா, பில்லா போன்ற படங்களை மீண்டும் வெளியிட்டபோது திரையரங்குகளில் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.
English Summary
Vijays film Sivakasi is set to re release on the upcoming 24th