கொ்சன் பகுதியில் தீவிரமடையும் போர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

இதையடுத்து இரண்டாம் கட்ட தாக்குதலை தொடர்ந்துள்ள ரஷ்யப்படைகள், கெர்சன் மாகாணத்தில் தாக்குதல் தீவிரமடையும் என்பதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொ்சன் நகரை நோக்கி உக்ரைன் படையினா் முன்னேறி வருவதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, மக்களை ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நீப்ரோ நதி வழியாக அனுப்பி வைக்கப்படும் பணி நிறைவடைந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு படை தளபதி அலெக்ஸாண்டா் கோடகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுவரை 70 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மக்கள் கொ்சன் பகுதியில் இருந்ததால் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதால் உக்ரைன் படையின் மீது நாங்கள் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

War intensifies in kherson region


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->