திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்! போலீசார் விளக்கம்!
USA car suddenly entered hospital 5 people injured
அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர கால அறைக்குள் திடீரென கார் ஒன்று புகுந்து அங்கு இருந்தவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தால் முதியவர்கள் 3 பேர் மற்றும் 2 இளைஞர்கள் என 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மருத்துவமனைக்குள் கார் புகுந்ததை பார்த்த ஊழியர்கள் காரை நிறுத்த முற்பட்டதால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் உள்நோக்கம் கொண்டதாக இல்லை எனவும் இது ஒரு விபத்து எனவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
USA car suddenly entered hospital 5 people injured