ரஷ்யாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள்.! ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா தகவல் - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை ஈரான் வழங்கி வருவதாகவும் அதன் மூலம் ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை ஈரான் முற்றிலும் மறுத்தது.

ஆனால் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தாவது,

உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷ்ய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷ்யாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது. 

எங்களிடம் உள்ள தகவல், ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என்றும், ஆனால் ரஷ்ய படைகள் தான் இயக்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US says it has evidence of Iranian forces supporting Russia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->