போரில் சீனா ரஷ்யாவுக்கு துணை நிற்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை - அமெரிக்க அதிபர் - Seithipunal
Seithipunal


போரில் சீனா, ரஷ்யாவுக்கு துணை நிற்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடங்கி தற்பொழுது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் மற்றும் ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களையும் வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுடன் பக்கபலமாக இருக்கும் என்று உங்களுக்கு கவலை உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, உக்ரைனுக்கு எதிரான போரில் சீனா, ரஷ்யாவுக்கு துணை நிற்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US president says There is no evidence that China will support Russia in war


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->