31 நாட்களாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு நிர்வாகம்: ரூ.62 ஆயிரம் கோடி இழப்பு; ட்ரம்ப் ஆட்சியில் இரண்டாவது முறையும் சறுக்கல்..?
US government administration loses Rs 62 000 crore
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் அரசு நிர்வாக செலவீனங்கள் குறித்த மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதன் மூலமே ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கும்.
அதன்படி, அமெரிக்காவின் மேலவையான செனட் அவையில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. மேலும், அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.

இதனையடுத்து, கடந்த அக்டோபர் 01 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டதால், அரசின் நிர்வாகம் முடங்கியது.
அத்துடன், அமெரிக்க அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படவில்லை. இதனால், கடந்த அக்டோபர் 01 முதல், அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி மூடப்பட்டது. சுமார் ஒருமாதம் (31 நாட்கள்) அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

இதன்காரணமாக அரசுக்கு, 07 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 62 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 06 வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும், 08 வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணி நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த சமயம் 2018-19-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
US government administration loses Rs 62 000 crore