வயாகரா மருந்தால் இப்படி பலனா? மருத்துவ உலகை அதிர வைத்த திருப்புமுனை! - Seithipunal
Seithipunal


ஆண்களின் விறைப்பு தன்மைக்கு பயன்படுத்தப்படும் வயாகரா குறித்த சில ஆராய்ச்சி முடிவுகள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தி உள்ளது. 

உண்மையில் வயாகரா என்பது மருந்தின் பெயர் கிடையாது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருந்தை தயாரிக்க கூடிய நிறுவனத்தின் பெயராகும். காலப்போக்கில் மருந்தின் பெயருக்கு பதிலாக அந்த நிறுவனத்தின் பெயரே  பிரபலம் அடைந்தது.

இந்த மருந்தை பொருத்தவரை உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்கவித்து ஆண்களின் விறைப்பு தன்மைக்கு உதவுகிறது. 

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ரத்த நாளங்கள் தளர்வதால், மனித மூளையின் உள்ள சிசுக்கள் பாதிக்கப்படுவைத்து குறைவதாகவும், வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படாமல் இது தடுக்கும் என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வின்படி நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனை என்றும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நியாபக மறதி நோய் மொத்தம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அல்சைமர் நியாபக மறதி, வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) நியாபக மறதி. இதில் நம் இந்திய நாட்டில் வாஸ்குலார் நியாபக மறதி நோயால் அதிகப்பேரை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

University of Oxford reserch Viagra Vascular Dementia 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->