இஸ்ரேல் - ஹமாஸ் போர் || காசாவில் 3,747 குழந்தைகள் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் இன்றோடு 25வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சுமார் 9,500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

இஸ்ரேல் தாக்குதலின் போது ஹமாஸ் பயங்கரவாதிகள் பல இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.இதனால் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே காசாவின் முக்கிய போக்குவரத்து தடமான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியுள்ளது. 

இந்த சாலையின் குறுக்கே நிற்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் பீரங்கிகள் ஹமாஸ் அமைப்பினரை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசா பகுதியில் மட்டும் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3,747 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த போரில் உயிரிழந்த இருக்க கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN said 3747 children died in Gaza in Israel Hamas War


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->