அமெரிக்கா செல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் விரும்பிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது.

தற்பொழுது 10 மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல் வெளிநாட்டு பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பயணத்தை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

இதையடுத்து ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை உள்ளடக்கிய 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine President Zelensky is going to America today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->