ரஷிய ஏவுகணைத் தாக்குதல் : உக்ரைனில் பல பகுதிகளில் மின்வெட்டு பாதித்துள்ளது - அதிபர் ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து பத்து மாதங்களைக் கடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த போரால் இரு தரப்பிலும் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், உக்ரைனின் பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இதில், ரஷிய ராணுவம் உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் ரஷிய ராணுவம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றியது. அந்த பகுதியை உக்ரைன் கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில், ரஷிய படைகள் உக்ரைன் நாட்டிலுள்ள பல பிராந்தியங்களில் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது, "உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கீவ் பிராந்தியம் மற்றும் தலைநகரம், எல்விவ் பகுதி, ஒடெசா மற்றும் பிராந்தியம், கெர்சன் மற்றும் பிராந்தியம், வின்னிட்சியா பகுதி மற்றும் டிரான்ஸ்கார்பதியா உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா முழுவீச்சுடன் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருவகிறது. இதனால், அவர்களின் ஏவுகணைகள் குறைந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியின் செயல்பாடுகள் ரஷியாவிற்கும் அதன் குடிமக்களுக்கும் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine president speach for Russian missile attack


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->