சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்.! - Seithipunal
Seithipunal


காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தனது அரசாங்கத்தின் புதிய அறிவிப்புகளை விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி ரிஷி சுனக் பின் இருக்கையில் அமர்ந்து வீடியோவில் பேசினார். இதையடுத்து இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் பேசும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்ததால், பலரும் பிரதமரை விமர்சித்தனர்.

இதனால் பிரதமர் ரிஷி சுனக் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக மன்னிப்பும் கோரினார். இதைத்தொடர்ந்து லங்காஷயர் காவல்துறை சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UK PM Rishi Sunak fined for not wearing seatbelt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->