மூன்றாவது முறையாக முடங்கிய ட்விட்டர்.! பயனர்கள் கடும் அவதி.!
Twitter paralyz for third time Users suffer
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை அமெரிக்காவின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் பணி புரிந்த பல உயர் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கினார். பின்னர் அதிகாரபூர்வ கணக்கு என்பதை உறுதி செய்யும் ப்ளூ டிகிற்காக பணம் செலுத்து முறை போன்றவற்றை கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், பல நாடுகளில் ட்விட்டர் செயலி முடங்கியதாகவும், எந்த பதிவுகளையும் காண முடியவில்லை என்றும் 'எர்ரர்' மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பயனர்கள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், சில மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் மீண்டும் வழக்கம் போல் செயல் படத்தொடங்கியது. ஆனால், டுவிட்டர் முடங்கியதாக வெளியான தகவல் பற்றி தற்போது வரை ட்விட்டர் நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு மூன்றாவது முறையாக இது போன்று ட்விட்டர் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Twitter paralyz for third time Users suffer