ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை; உக்ரைன் அதிபர் மற்றும் ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு..!
Trump accuses Ukrainian President and Joe Biden of colluding in peace talks in Geneva
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முன்மொழிவு பற்றி விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர். இதன் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனின் தலைமை, அமெரிக்காவின் முயற்சிக்கு எந்த ஆதரவும் தரவில்லை. பாராட்டவும் இல்லை என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் ரஷ்யாவுடனான மோதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது டிரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து, டொனால்ட் டிரம்ப் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
''ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு வன்முறை மற்றும் பயங்கரமானது. சரியான அமெரிக்க மற்றும் உக்ரைன் தலைமை இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது. நான் இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஜோ பைடன் நிர்வாகத்தின் போது இந்த போர் தொடங்கியது. பின்னர் மேலும் மோசமாகிவிட்டது.

ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு போரை எனது பதவிக்காலத்தில் நான் பெற்றேன். இந்த போர் அனைவருக்கும், குறிப்பாக கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தோல்வியாகும். உக்ரைன் தலைமை நமது முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் தரவில்லை. பாராட்டவும் இல்லை.
மேலும், ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. உக்ரைனுக்காக நேட்டோவிற்கு கணிசமான அளவு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது, அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தார். மனிதப் பேரழிவில் இழந்த அனைத்து உயிர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.'' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Trump accuses Ukrainian President and Joe Biden of colluding in peace talks in Geneva