உக்ரைனுக்கு ஆதரவாக நிற்போம் - அமெரிக்க பிரதிநிதிகள் குழு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் உக்ரைனுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆடம்  ஸ்மித் தலைமையிலான உயர் அதிகார குழுவினர், உக்ரைன் அதிபர் ஜெலன்சியை தலைநகர் கீவில் சந்தித்து பேசிய அவர்கள், அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் வழங்கும் என்று தெரிவித்தனர்.

மேலும் உக்ரைனுக்கு, அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஆதரவாக பொருளாதார, ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இன்னும் தொடர்ந்து இந்த உதவிகள் வழங்கப்படும் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்சிக்கும், மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவாக நிற்போம் என்று உயர் மட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Top US delegation assures support to ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->