தொடர் குறைவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 52,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 6615க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 காசுகள் உயர்ந்து ரூ. 88.70 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 88 ஆயிரத்து 700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.