வருடத்திற்கு 1 குழந்தை.. 28 வயதில் இத்தனை குழந்தையா? கணவர் மேல காதல் இருக்கலாம்.! அதுக்காக இப்படியா.?! 
                                    
                                    
                                   tiktok famous women make 9 babies in 28 yrs
 
                                 
                               
                                
                                      
                                            தன்னுடைய 28 வயதில் ஒரு பெண் ஒன்பது குழந்தைகளை பெற்றிருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தை என்று அட்டவணை போட்டு குழந்தை பெற்றதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். 17 வயதில் அவரது கணவரை சந்தித்து திருமணம் செய்து இருக்கிறார். தனது கணவருக்கு குழந்தைகள் என்றால் அதிக பிரியம் என்பதால் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு கணவரை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளார்.

இது பற்றிய தகவலை அவர் தனது டிக் டாக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொரு முறை கர்ப்பம் அடையும் போதும். இத்துடன் குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், நான் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒன்பதாவது குழந்தைக்கு பின் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறேன்.
என் கணவரும் இதை ஏற்றுக் கொண்டார். என் டீனேஜ் வாழ்க்கை பெரும் அளவில் குழந்தை பெற்றுக் கொள்வதிலேயே முடிந்துவிட்டது எனக்கு வருத்தமாக இருந்தாலும் இந்த குழந்தைகளுடன் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       tiktok famous women make 9 babies in 28 yrs