பலருக்கு பால் ஊற்றிய டிக் டாக் ஓனருக்கு பால் ஊற்றிய சோகம்.. கெடுபிடியால் அரங்கேறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலியால் பல சம்பவங்கள் அரங்கேறி, தற்போது டிக் டாக் செயலிக்கே சம்பவம் செய்யும் அளவிற்கு இந்திய அரசு அதிரடியாக டிக் டாக் செயலியை தடை விதித்தது. டிக் டாக் செயலியை உபயோகப்படுத்தும் நபர்களை பைத்தியக்காரர்கள் போல செய்ய வைத்த சோகம், தற்போது டிக் டாக் உரிமையாளரை பைத்தியக்காரன் போல ஆக்கிவிடும் என்பதே நிதர்சனமாக உள்ளது. 

டிக் டாக் செயலி நிறுவனரான 37 வயது சாங் யாமிங், சுமார் 80 கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு இருந்தார். டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைடான்ஸ் தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில். வியத்தகு வளர்ச்சியானது இந்த டிக் டாக் செயலி மூலம் பெற்றுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய உலக அளவில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் நிறுவனமும் இதுவாகவே இருந்தது. 

குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சியைத் நிறுவனம் பெற்ற நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தணிக்கை மற்றும் இறுக்கமான இணைய கட்டுப்பாடுகளில் சிக்காத படி, சீனாவை தவிர்த்து உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும்படி வீடியோ செயலியை உருவாக்கினார். சீனாவில் மட்டும் இயங்கும் வகையில் இல்லாமல், சீனாவை தவிர உலகமெல்லாம் இயங்கும் டிக் டாக் செயலியை இயக்க புத்திசாலித்தனத்துடன் தனது அடியை உரிமையாளர் முன்வைத்துள்ளார். 

டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் குறித்த தரவுகள் அனைத்தும் சிங்கப்பூரில் சேமித்து வைக்கப்பட்ட நிலையில், சீனாவை சேர்ந்த நிறுவனம் என்று இருந்தாலும், தகவல் திருட்டில் ஈடுபடுத்தும் செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல மேலாளர்களையும் அந்தந்த நாடுகளில் இருந்து சாங் யாமிங் தேர்ந்தெடுத்திருந்தார். இந்த பல நடவடிக்கைகள் கையில் எடுத்து முடித்த டக் டாக் நிறுவனம், சீனாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போரில் சிக்கி பெரும் சோகத்தை கண்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அமெரிக்க கம்பெனிக்கு டிக் டாக் விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக தடை விதிப்போம். 45 நாட்களுக்குள் இது நடந்தாக வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டிய நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், கடுமையான அழுத்தம் கொடுத்து மிக குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்க முயற்சி செய்துள்ளது. 

சீன அரசின் கெடுபிடியான நடவடிக்கையால் டிக் டாக்கிற்கு இந்த சோகம் அரங்கேறியுள்ளது. கடந்த 2018 ஆம் வருடத்திலேயே டிக் டாக் செயலியை இந்தோனேசியா தடை செய்த நிலையில், தற்போது இந்தியாவும் தடை செய்துள்ளது. அடுத்தபடியாக அமெரிக்காவும் தடை செய்ய இருக்கிறது. இந்த தகவல் யாருக்கு நஷ்டமோ இல்லையோ, டிக் டாக் செயலின் உரிமையாளர் சாங் யாமிங்கிற்கு பெரும் அடிதான்.

தமிழகத்தை பொறுத்த வரையில் இதனால் பல சிறுமிகள் வாழ்க்கை சீரழிந்து, இளம் வயதில் பால் ஊற்றி இறுதி மரியாதையை செய்யவைத்த நிலையில், டிக் டாக் நிறுவனத்திற்கே பால் ஊற்றும் பரிதாபம் அரங்கேறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tic Tok Owner Zhang Yiming massive loss


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->