நிலவில் கால் பதிக்க போகும் பெண்.! நாசா வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா நேற்று வெற்றிகரமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இது நிலவை சென்றடைய 48  நாட்கள் எடுத்துக்கொள்ளும். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்து இதுவரை 50 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதை அடுத்து வரும் 2024-ம் ஆண்டு நிலாவிற்கு முதல் முதலில் பெண் விஞ்ஞானியை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்ட தகவலில் நிலவில் முதல் பெண்ணே தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் ஆர்ட்டிமிஸ் 1 விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு முதல் பெண் நிலவில் கால் பதிப்பவர் என பெருமையை நாசா அடையும் என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார். மேலும் இந்த ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

English Summary

The moon is going to the first girl. NASA announces


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal