643 உயிர்கள் பலி… பொருளாதார நெருக்கடியில் இலங்கை...! - IMF அறிவித்த அவசர நிதி - Seithipunal
Seithipunal


இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையை உலுக்கிய ‘டிட்வா’ புயல், அந்த தீவு நாட்டையே பேரழிவின் பிடியில் தள்ளியது. தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக நகரங்கள், கிராமங்கள் என பல பகுதிகள் சிதிலமடைந்து, இலங்கை முழுவதும் சோகக் காட்சிகளாக மாறியது.

இந்த கொடூர புயல் தாக்குதலில் 643 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடமைகள் மட்டுமின்றி, அன்பான உறவினர்களையும் இழந்து நிராதரவாக நிற்கும் நிலை உருவானது.

ஏற்கனவே நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தநிலையால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த இலங்கை, இந்த இயற்கை பேரிடரால் மேலும் பெரிய பின்னடைவைக் கண்டுள்ளது.

மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் சவாலாக மாறியுள்ளன.இந்த சூழலில், புயல் பாதிப்புகளில் இருந்து இலங்கை மீள உதவிடும் வகையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான அவசர நிதியை நிவாரணமாக விடுவிப்பதாக IMF அறிவித்துள்ளது. இந்த உதவி, பேரழிவில் சிக்கிய இலங்கைக்கு ஓர் உயிர்க்கயிறாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

643 lives lost Sri Lanka economic crisis Emergency funding announced by IMF


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->