ஸ்வீடன் நாட்டில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! 16 வயது சிறுவன் கைது!
sweden gun fire 16 years boy arrested
ஸ்வீடனின் உப்சலா நகரத்தில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர். வக்சலா சதுக்கம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையில் சென்ற பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தெரிவித்தது. தாக்குதலுக்குப் பின்னர், அவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில், மூவர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பாதுகாப்புப் படையினர், சந்தேகத்தின் பேரில் 16 வயதுடைய சிறுவனை கைது செய்துள்ளனர்.
இந்நிகழ்வால் ஸ்வீடன் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அண்மைக்காலமாக அந்நாட்டில் குற்றவாளி கும்பல்களின் சுழற்சி செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அஞ்சப்படுகிறது.
துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி கடுமையான கட்டுப்பாடுகள், உள்நாட்டு லைசன்ஸ் தேவைகள் உள்ளபோதும், இத்தகைய சம்பவங்கள் ஏற்படுவதே பெரும் கவலையாயுள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரியில் ஒரிப்ரோ நகரில் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
sweden gun fire 16 years boy arrested