சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ராஜினாமா! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளராக இந்திய வம்சாவளி சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் இருந்து வந்தார். இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் அதிகாரத்திற்கு உட்பட்ட சில ஆவணங்களை பிறருக்கு மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது ராஜினாமா செய்துள்ளார். நடந்த தவறுக்கு ஆன்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதற்கு முன்பு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட மேடையில் இந்தியர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்தில் பெரும்பான்மையான இந்தியர்கள் தங்களது விசா காலம் முடிந்தும் இங்கிலாந்தில் உள்ளதாக அவர் கூறிய கருத்தை பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்தியர்களை குறித்து அவர் கூறிய கருத்திற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suella Braverman resigned position of Englands Home Secretary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->