அதிக வரிவிதிப்பு திட்டத்தின் எதிரொலி; பிரிட்டனை விட்டு வெளியேறும் உருக்கு தொழிலதிபர் லட்சுமி மிட்டல்..! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் வாழ் பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க, அந்நாட்டு அரசாங்கம்முடிவு செய்துள்ளதால், அந்நாட்டை விட்டு வெளியேற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, உலக புகழ்பெற்ற உருக்கு தொழிலதிபருமான லட்சுமி மிட்டல் முடிவு செய்துள்ளார்.

ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டளலுக்கு 75 வயது. இவர் 1980களின் இறுதியில் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று செட்டில் ஆக்கியவர். வெளிநாடுகளில் உருக்கு ஆலைகளை தொடங்கிய இவர் லண்டனில் இருந்தே தன் உருக்கு ஆலை தொழிலை கவனித்து வந்தார். இவரது  'ஆர்சிலோர் மிட்டல்' உருக்கு ஆலை தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 

பிரிட்டனின் எட்டாவது பெரிய பணக்காரராக உள்ள லட்சுமி மிட்டல் தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரிட்டன் அரசு கடந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கு பல்வேறு வரிகளை உயர்த்தியது. குறிப்பாக புதிய வரிகளை விதித்தது. 

அதாவது, குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் அதற்கு வாரிசு வரியை அறிமுகப்படுத்தியது. இதனால் பெரும் தொழிலதிபர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அத்துடன், அந்நாட்டில் வரும் 26-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பிரிட்டனை விட்டு வெளியேறும் தொழிலதிபர்களுக்கு 20 சதவீத வெளியேறும் வரி விதிக்க நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதனால் இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டல் மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு இடம்பெயர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அங்கு வாரிசு வரி கிடையாது என்ற நிலையில், லட்சுமி மிட்டலுக்கு துபாயில் ஏற்கனவே சொத்துக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Steel magnate Lakshmi Mittal to leave Britain due to high tax plan


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->