தாய்ப்பாலில் யுரேனியம்; வயிற்றில் உள்ள சிசுவுக்கு புற்றுநோய் அபாயம்: பீஹாரில் ஆய்வாளர்கள் பேரதிர்ச்சி..!
Researchers in Bihar shocked by finding uranium in breast milk
பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மருத்துவமனையின் குழுவினரும், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் குழுவினரும் இணைந்து, பீஹாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் குறித்து அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
குறித்த ஆய்வில் பீஹாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜூலை வரை இந்த குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். குறிப்பாக, பீஹாரில் உள்ள போஜ்பூர், சமஸ்திபூர். ககாரியா, பெகுசராய், கதிஹார், நாளந்தா ஆகிய மாவட்டங்களில் வசித்து வரும் 17 வயது முதல் 35 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட அனைத்து தாய்ப்பால் மாதிரிகளிலும் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த யுரேனியத்தின் செறிவானது, 0 முதல் 5.25 மைக்ரோகிராம் வரை இருந்துள்ளது.
சராசரியாக ககாரியாவில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் இந்த அளவு அதிகமாகவும், நாளந்தாவில் மிக குறைவாகவும் கண்டறியப்பட்டுள்ளது. யுரேனியம் பாதிப்பால் பீஹாரில் 70 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இது குறித்து இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறியதாவது; தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், ஆழ்துளை கிணற்று நீரை குடிக்க பயன்படுத்துவது, ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் ரசாயன உரங்கள் போன்றவையே இதன் முக்கிய காரணமென கூறப்படுகிறது.

அத்துடன், தாய்மார்களின் தாய்ப்பாலில் எப்படி யுரேனியம் இருந்துள்ளது என்பதன் மூலத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், தாய்மார்களின் வயிற்றில் உள்ள சிசுவானது, யுரேனியம் பாதிப்பால் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என பேரதிர்ச்சியாக செய்தியை ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர்.
அதாவது, சாதாரணமாக தண்ணீரில் யுரேனியத்தின் அளவு என்பது லிட்டருக்கு 50 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்பது உலக சுகாதார அமைப்பின் அளவுகோல் ஆகும்.
யுரேனியம் என்றால் என்ன..?
இயற்கையில் 92 தனிமங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் லேசான தனிமம் என்றால் அது ஹைட்ரஜன் ஆகும். மிகவும் கனமான தனிமம் யுரேனியம். அதன் காரணமாகத்தான் அணுமின் உலைகளில் இந்த தனிமம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றது.
யுரேனியம் என்பது அணு எண் 92 மற்றும் குறியீடு 'U' கொண்ட, இயற்கையாக நிகழும் ஒரு கதிரியக்க தனிமம் ஆகும். இது அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பொதுவாக பாறைகளிலும், பூமியிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. யுரேனியத்தின் மிக முக்கியமான ஐசோடோப்பு, அணு ஆயுதங்கள் மற்றும் அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம்-235 ஆகும், இது இயற்கையில் அரிதாகவே காணப்படுகிறது.
இயற்கை இருப்பு: யுரேனியம் பூமியில் உள்ள பாறைகள், மணற்கல் மற்றும் ஷேல் போன்ற பல்வேறு மண் மற்றும் பாறைகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.
கதிரியக்க தன்மை: யுரேனியம் ஒரு கதிரியக்க தனிமம் ஆகும், இது நிலையான ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
அணு எரிபொருள்: யுரேனியம், குறிப்பாக அதன் ஐசோடோப்பான யுரேனியம்-235, அணு மின் நிலையங்களுக்கு ஆற்றலை வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
அணு ஆயுதங்கள்: யுரேனியம் அணு ஆயுதங்களின் ஒரு முக்கிய அங்கமாகும்.
கண்டுபிடிப்பு: 1789 ஆம் ஆண்டில், மார்ட்டின் கிளப்ரோத் என்ற ஜெர்மன் வேதியியலாளர் யுரேனியத்தைக் கண்டுபிடித்தார்.
ஐசோடோப்புகள்: யுரேனியம் பல்வேறு ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது, இதில் யுரேனியம்-238 மற்றும் யுரேனியம்-235 ஆகியவை மிகவும் பொதுவானவை. யுரேனியம்-235 ஆனது பிளவுபடும் தன்மை கொண்டது, இது அணுசக்தி உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.
English Summary
Researchers in Bihar shocked by finding uranium in breast milk