மத்திய அரசின் அதிரதி நடவடிக்கை: ரூ.262 கோடி போதைப்பொருள் பறிமுதல்'; அதிகாரிகளை பாராட்டிய அமித்ஷா..!
Amit Shah praises officials for seizure of drugs worth Rs 262 crore
ஒன்றிய அரசு போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''நமது அரசு போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தீவிர விசாரணையின் போது, புதுடில்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது ஒரு திருப்புமுனை நடவடிக்கையாகும். பிரதமர் மோடியின் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, பல நிறுவன ஒருங்கிணைப்புக்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் டில்லி போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்று அமித்ஷா கூறியுள்ளார்.
English Summary
Amit Shah praises officials for seizure of drugs worth Rs 262 crore