கமலா ஹாரிஸால் மகிழ்ச்சி., உற்சாகமாக ஜோ பிடனை வாழ்த்தும் ஸ்டாலின்.! குத்திக்காட்டும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3-ம் தேதி நடந்து முடிந்தது. இதன் பின்னர் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் முழுமையாக வரவில்லை. கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் பல்வேறு மாகாணங்களில் இழுபறி நீடித்து வந்த நிலையில், ஒரு வழியாக பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 20 தேர்தல் குழுக்களின் வாக்குகளையும், நெவாடா மாகாணத்தில் 6 குழுக்களின் வாக்குகளையும் ஜோ பைடன் கைப்பற்றினர்.

இதனையடுத்து 290 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். 

இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் நெட்டிசன்கள் பலரும் யார் யாரோ ஜெயிக்கிறங்கா நம்ம தலைவர் மட்டும் தோத்துகிட்டே இருக்காரே என்று மறைமுகமாக ஸ்டாலினை விமரிசித்து மீம் போட்டு பங்கம் செய்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin wishes to kamala harris


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->