இலங்கையில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை.! அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு.! - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்காக 85 சதவீதமும், அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக 80 சதவீதமும் வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி தடைபட்டு மருத்துவ பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆய்வக வேதிப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை கருவிகளின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவ பொருட்களின் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அடுத்த ஒரு மாதத்தில் கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமானது. அத்தியாவசிய மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் தடையின்றி மருத்துவமனைகளில் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilankan postpone surgeries due shortage of medical supplies


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->