பேஸ்புக், ட்விட்டர், வாட்சப்க்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம்! இயல்பு நிலைக்கு திரும்புமா இலங்கை!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அங்கே உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர சொகுசு விடுதிகளிலும் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் மரணித்த நிலையில் பலரும் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

இதனை அடுத்து அந்த நாட்டில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக அந்நாட்டிற்கு மட்டும் சமூக வலைதளங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அங்கங்கே தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதே போல தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. 

இந்நிலையில் இன்று முதல் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தொடர்ந்து மக்கள் பீதியில் இருந்து வருவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka govt relax the ban after terrorist attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->