இலங்கை கிரிக்கெட் வீரருக்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக இரு தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றத்திற்காக சிட்னி நகரில் ஆஸ்திரேலியா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் சிட்னியின் கிழக்கு புறநகர் பகுதியில் வசிக்கும் பெண்ணை கடந்த புதன்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த பெண் சிட்னி போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. 

பல நாட்களாக ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அந்தப் பெண்ணுடன் பேசியுள்ளார். பின்னர் கடந்த புதன்கிழமை ரோஸ் பேயில் சந்தித்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த சனிக்கிழமை தனுஷ்க குணதிலகவை சிட்னியில் தங்கி இருந்த ஹோட்டலில் கைது செய்யப்பட்டுகாவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அவர் மீது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் குணதிலகவுக்கு ஜாமின் வழங்க ஆஸ்திரேலிய போலீசார் மறுத்துவிட்டனர். இதனை அடுத்து ஜாமீன் கோரி குணதிலக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை ஜனவரி மாதம் வரை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan cricketer sentenced to two months in jail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->