பிரேசில் | தென்மாநிலத்தை உலுக்கிய புயல்! நெஞ்சை பதறவைக்கும் மக்களின் அவல நிலை! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டின் தென் மாநிலம் ரியோ கிராண்ட்டோ சுல் பகுதியில் பயங்கரமான புயல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரினந்தனர். 

புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சுமார் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. அதில் 1650 பேர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். 

இது குறித்து மாநில கவர்னர் தெரிவிக்கையில், மாநிலத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த புயலால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை வெப்பமண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் ஒரு பெண் அடித்துச் செல்லப்பட்டார். 

அந்த பெண்ணை கயிறு கட்டி மீட்டபோது கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தார். 

இந்நிலையில் ரியா கிராண்ட்டோ சுல் பகுதியில் மக்கள் மாடியில் இருந்து உதவி கேட்பது போன்ற வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஜூன் மாதம் ஏற்பட்டு 16 பேர் உயிரிழந்தனர் 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

southern brazil storm


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->