ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு – புபோர் நெருக்கடியை தீர்க்க சீனாவும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகள்- புதின்
Shanghai Cooperation Organization Summit Putin praises China and India for efforts to resolve Bubor crisis
தியான்ஜின் (சீனா):ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இன்று அதன் நிறைவுநாள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளான சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.மேலும் 2 பார்வையாளர் நாடுகளும், 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது:ரஷியா–உக்ரைன் போர் நெருக்கடியை குறைப்பதற்காக சீனாவும், இந்தியாவும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விரைவில் தலைவர்களுக்கு விளக்கமளிக்கிறேன்.அந்த சந்திப்பில் எட்டப்பட்ட புரிதல்கள், உக்ரைனில் அமைதி நிலைநிறுத்தப் புதிய வாயிலாக இருக்கும்.என்றார் புதின்.
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களின் பங்கேற்பால், இந்த மாநாடு ஆசியாவில் பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
English Summary
Shanghai Cooperation Organization Summit Putin praises China and India for efforts to resolve Bubor crisis