ஏன் மன்னிப்பு கேட்கவில்லை..பிரதமருக்கு எதிராக சீறிய  ப.சிதம்பரம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூருக்கு இரண்டு ஆண்டுகளாக செல்லாததற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை  என்று  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.


கடந்த 2023-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுல் ஒன்றான மணிப்பூரில் வசிக்கும் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்  இனக்கலவரமாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில்   260-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த கருத்தும் கூறவில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி,நேற்று மணிப்பூர் சென்றார் . டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு சென்றார் . அங்கிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு சென்றார் .

அதனை தொடர்ந்து அங்கு அவர் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.


இந்தநிலையில் பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 258 பேர் உயிரிழந்தனர், 1,108 பேர் காயமடைந்தனர், 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன,60,000 பேர் இடம் பெயர்ந்தனர்,பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நேற்று மணிப்பூர் சென்ற மோடி அவர்கள் ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா?இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why didnt he ask for forgiveness P Chidambaram who rebelled against the Prime Minister


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->