இனி நாடு முழுவதும் பெண்களுக்கு அது இலவசம் தான்.! அதிரடியாக சட்டம் கொண்டு வந்த ஸ்காட்லாந்து.! - Seithipunal
Seithipunal


ஸ்காட்லாந்து நாடு முழுவதும் பொது இடங்கள், பள்ளி - கல்லூரிகள் என பல்வேறு இடங்களில், பெண்களுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்க, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான மசோதா ஒன்று நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மசோதா மீதான விவாதம் முடிந்த பின் சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த மசோதாவுக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.  இதன் மூலம் இந்த மசோதா சட்டமாகி உள்ளது. 

உலகில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து நாடு பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scotland new law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->