லித்தியம்-அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் காலமானார்.!!  - Seithipunal
Seithipunal


லித்தியம்-அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த  ஜான்குட் எனஃப் காலமானார்.!! 

கடந்த 1922ல் ஜெர்மனியில் பிறந்தவர் ஜான்குட் எனஃப். இவர் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

இதையடுத்து, ஜான்குட் எனஃப் கடந்த 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா அறிவியலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கினார். 

இவர் கண்டுபிடித்த லித்தியம் பேட்டரியை டெஸ்லாவின் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. செல்போன்கள், கணினிகள் மற்றும் இதயமுடுக்கிகள் முதல் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரிச்சார்ஜபிள் சக்தியுடன் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கும் லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கும் பணிக்காக 2019ல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 

ஜான்குட் எனஃப் அடுத்த மாதம் 25ம் தேதி தனது 101வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அறிவியல் உலகத்திற்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பேரிழப்பாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scientist john goodenough passed away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->