கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சம் அடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேர் 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்போரினால் உக்ரைனின் ஏற்றுமதி மற்றும் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமான பாக்முட்டில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சம் அடைந்திருந்த பள்ளி மற்றும் அதன் நிர்வாகக் கட்டிடம் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாதநிலையில், அப்பகுதியில் சேதமடைந்த கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian forces bomb Ukrainian schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->