உக்ரைனின் கெர்சன் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.

மேலும் போர் தொடங்கியதிலிருந்தே உக்ரைனின் மிகப்பெரிய நகரமான கொ்சன் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பின்னர் உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலால் ரஷ்ய படைகள் அப்பகுதியிலிருந்து பின் வாங்கின.

இந்நிலையில் கொ்சன் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெல்கொராட் பகுதியில் ரஷ்யபடைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரஷ்ய நடவடிக்கையை கண்டிப்பதற்கு உக்ரைன் அதிபர் உலக கால்பந்து போட்டியை மேற்கொள்காட்டியுள்ளார். அதில் நியாயமாக நடக்கும் போட்டியில் யாா் வலிமையானவா் என்று வெவ்வேறு நாடுகள் தீா்மானிக்க முடியும் என்பதை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிரூபிக்கிறது என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian air attack on kherson region in ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->