ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி! அமெரிக்கா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீண்டும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை சமாளிக்கவும், மீண்டும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த உபகரணங்களில் பாதுகாப்பு தொலைத்தொடர்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், வெடிமருந்துகள், தளவாட உதிரிபாகங்கள், இருளிலும் குறிபார்த்து தாக்கும் கருவிகள், லேசர் ராக்கெட் ட்ரோன்கள் ஆகியவை அடங்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war America support for ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->